×

இன்று நடக்கிறது அரியலூர் அருகே பொய்யாதநல்லூரில் மகா சண்டி யாகம்


அரியலூர், மே 30: அரியலூர் மாவட்டம் பொய்யாதநல்லூர் கிராமத்தில் அமைந்துள்ள சாமுண்டீஸ்வரி அம்மன் கோயிலில் வைகாசி மாத அமாவாசையை முன்னிட்டு பிரத்யங்கிரா தேவிக்கு மிகப்பிரம்மாண்டமான மிளகாய் சண்டியாகம் நடைபெற்றது. யாகத்தில் மூட்டை மூட்டையாக மிளகாய் ஜாதிக்காய், கடுக்காய், கருமிளகு ,ரோஜா இதழ், முக்கனிகள் ஆன மா, பலா, வாழை அவற்றை யாகத்தில் போட்டு பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். கரும்பு தேங்காய் வாழைப்பழம் சப்போட்டா மாதுளை பழங்களையும் பக்தர்கள் யாகத்தில் இட்டனர். வைகாசி அமாவாசையை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் அம்மனை தரிசித்தனர். பின்னர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும் ஆராதனையும் நடைபெற்றது. கலந்துகொண்ட மக்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஊர் பொதுமக்கள் மற்றும் விழா கமிட்டியினர் செய்திருந்தனர்

Tags : Maha Chandi ,Yagya ,Poyyathanallur ,Ariyalur ,
× RELATED மழை வேண்டி வருண யாகம்